பலாங்கொடை பிரதேசத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் செங்கமாலை நோய் பரவும் அபாயம்

339

பலாங்கொடை பிரதேசத்தில் வயிற்றுப்போக்கு மற்றும் செங்கமாலை நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பலாங்கொடை பேரகெட்டிய, உடகந்த மற்றும் வலேபட ஆகிய இடங்களிலேயே இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 150 பேர் பாதிக்கப்பட்டு பலாங்கொடை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பலாங்கொடை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜீ்எம்.பீ திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த நோய் தொற்றுக்களால் அதிகமாக இதுவரை எவரும் பாதிக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளதோடு, நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சைகளைப் பெற்று தருவதற்கு வைத்தியசாலை வட்டாரங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE