அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதன் போட்டி வேட்பாளர்களான குடியரசு கட்சியை சார்ந்த டிரம்பும் ஆளும் ஜனநாயக கட்சியை சார்ந்த ஹிலாரி கிளிண்டனும் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் உள்ளனர்.
ஆரம்பத்தில் தங்களுடைய விவாத நிகழ்ச்சிகளுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொண்டவர்கள், இப்போது அந்த மேடை நாகரிகத்தையும் புறக்கணிக்கும் அளவுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு உள்ள கோபத்தை மறைக்க முடியாதவர்களாக செயல்படுகிறார்கள்.
ஹிலாரியை ’கேவலமான பெண்’ என்றார் டிரம்ப். இப்படி வர்ணிப்பதாலும் தேர்தல் தில்லுமுல்லுகளாலும் டிரம்ப் ஜெயிக்க முடியாது என்கிறார் ஹிலாரி.
தனது தவறுகளை தந்திரோபாயங்களால் பொசுக்கி விடலாம் என டிரம்ப் நம்புகிறார். ஆனால், தேர்தலில் அவர் நம்பிக்கை தலைகீழாக மாற வேண்டும்” என மக்களிடம் ஹிலாரி கிளிண்டன் கேட்டுக்கொண்டார்.
மேலும், கடந்த வாரங்களில் டிரம்பின் பலாத்கார செயலினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மனம் திறந்து கூறிய குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவிடமுடியாது.
டிரம்ப் வேண்டுமானால் அதை எண்ணங்களில் இருந்து வெளியேற்றிவிடுங்கள் என மக்களிடம் தனக்கு சாதகமாக கேட்டுக்கொள்ளலாம்.
டிரம்பின் ஆதரவாளர்கள் பலாத்காரத்தின் ஆதரவாளர்கள். அவர்களை மட்டும் வைத்து வென்றுவிடலாம் என நம்புகிறார் டிரம்ப்.
ஆனால், வரும் தேர்தலில் டிரம்பை தோற்கடிப்பதற்கு பெண்கள் பற்றி கேவலமாக பேசியதும் பெண்களிடம் அவர் அத்துமீறி நடந்த விஷயங்களும் அவர் நம்பிக்கையை தலைகீழாக மாற்றும் என உறுதியாக கூறுகிறார்.