பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளது.-அமைச்சர் மலிக் சமரவிக்கிரம

230

download-2

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இந்திய அரசாங்கத்தின் உதவியை கோரியுள்ளதாக அனைத்துலக வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.

கொழும்பு வந்துள்ள இந்திய அரசாங்கத்தின் வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதனை கூறியுள்ளார்.

மேலும் இலங்கையில் இந்தியாவிற்கு இடையில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு திட்டமே பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தியாகும்.

இந்த நிலையில் பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பாக இலங்கை அமைச்சரவை இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் முடிவு ஒன்றை எடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா இலங்கைக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தமான எட்கா ஒப்பந்தம் கைச்சாத்திடும் இறுதித் தருவாயில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE