அட்டன் கண்டி பிரதான வீதியில் கம்பளை பல்லேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்த நிலையில் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
01.04.2016 மாலை 5 மணியளவிலே இவ் விபத்து நிகழ்ந்துள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
நோர்வூட் டங்கள் தோடட்டத்தை கண்டி வைத்திய சாலையிலிருந்து நோர்வூட் தோட்டத்திற்கு மரணமான சடலமொன்றை ஏற்றிவந்த சிறிய ரக லொறியுடன் நாவலபிட்டி பகுதியிலிருந்து கண்டி நோக்கி சென்ற கெண்டர் லொறியொன்று மோதுண்டே இவ் விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் சிறியரக லொறியின் சாரதியும் லொறியில் சென்ற நால்வருமாக ஐந்துபேர் படுகாயமடைந்த நிலையில் நாவலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபின் மேலதிக சிகிச்சைக்காக சாரதி கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணை நடைபெறுகின்றது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்