பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கையினை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதை கண்டித்து பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த வேலை நிறுத்ததிற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தமது ஆதரவினை தெரிவித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசியல் தலையீடுகள் அற்ற புதிய நியமனங்கள் வேண்டும், மொழிக்கொடுப்பனவு வேண்டும், சம்பளத்தை அதிகரி, மாதாந்த இழப்பீட்டு தொகையை சமமாக அபகரி போன்ற பதாதைகள் பல்கலைக்கழகத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.