ஒலுவில் வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் மறுஅறிவித்தல் வரை தொலைக்காணொளி(Zoom) ஊடாக நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் நேற்று(19.01.2024) இடம்பெற்ற ஆலோசனைக் குழு கூட்டத்தின் போது கூறியுள்ளார்.
மறுசீரமைப்பு பணிகள்
மேலும், வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு மறுசீரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலேயே மேற்படி தீர்மானத்துக்கு வந்ததாகவும் பதில் பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.