பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

324

 

 

தமது தேவைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கம் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தமது கல்விக்கான தேவைகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற நிதியை 5,000 ரூபா வரை அதிகரிக்குமாறும், விரிவுரையாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தங்குமிடங்கள் எந்தவித வசதிகளும் இன்றி காணப்படுவதாகவும் இது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டும் இதுவரை  எந்த விதமான வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு போதியளவு வகுப்பறை வசதிகள் இல்லாமையால், ஒரு வகுப்பு நிறைவடையும் வரை ஒரு தொகை மாணவர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE