பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை இம்மாதம் நிறைவடைவதற்கு முன்னர் வௌியிட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடிப்படையாக கொண்டு இவ் வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்படவுள்ளது.
இதன்படி இம்முறை பல்கலைக்கழகத்திற்கு 25 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ள நிலையில், 50 ஆயிரத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.