பல்பீர் சிங்கின் கடைசி ஆசை

156

ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி தங்கப் பதக்கம் வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதே தனது கடைசி ஆசை என்று இந்திய ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் (91) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ரியோவில் இந்திய ஹாக்கி அணி பதக்கம் வெல்லும் என உறுதியாக நம்புகிறேன். இந்திய அணி தங்கம் வெல்வதைப் பார்க்க வேண்டும் என்பதே எனது கடைசி ஆசை. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

உயர்ந்த குறிக்கோளோடு கடினமாக உழைக்க வேண்டும். துணிச்சல் மிக்க தகுதியானவர்களுக்காகவே முதலிடம் என்பது காலியாக இருக்கிறது. இதையேதான் நான் கேப்டனாக, அணியின் தலைமைப் பயிற்சியாளராக, மேலாளராக இருந்த காலத்தில் வீரர்களிடம் கூறுவேன். அந்த தத்துவத்தில் வாழ்நாள் முழுவதும் எனக்கு நம்பிக்கை இருந்தது. இந்திய அணியினர் ஒவ்வொரு ஆட்டத்தையும் இறுதி ஆட்டமாகக் கருதி ஆட வேண்டும். தாக்குதல் ஆட்டத்துக்கு அளிக்கும் அதே முக்கியத்துவத்தை, தடுப்பு ஆட்டத்துக்கும் அளிக்க வேண்டும் என்றார் பல்பீர் சிங்.

இந்திய ஹாக்கி அணி, ஒலிம்பிக்கில் 8 முறை தங்கம் வென்றுள்ளது. அதில் மூன்று முறை (1948, 1952, 1956) இந்திய அணியில் பல்பீர் சிங் இடம்பெற்றிருந்தார்.balbir

SHARE