பல்வேறுபட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உரை

182

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேற்றைய உரை பல்வேறுபட்ட விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அவரின் கோபமும் வெளிப்பட்டிருந்தனை அவதானிக்க முடிந்தது.

அவரின் முக்கியமான குற்றச்சாட்டுக்களில் ஒன்று நூறு நாள் வேலைத்திட்டம் தான். அதுவொரு மடத்தனமானது என்று விமர்சித்த ஜனாதிபதி, தான் பதவியேற்ற மறுநாளே நாடாளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருந்தது மகா தவறு என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அதேபோன்று, அமைச்சரவைக்கு வந்த பல பிரேரணைகளை நான் தடுத்து நிறுத்தியுள்ளேன் எனவும், அந்தப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாடு பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்திருக்கும்.

அமைச்சரவைக்கு ஒரு தடவை அரச வங்கிகளில் உள்ள நிதியை தனியார் வங்கிக்கு மாற்றும் ஒரு பிரேரணையைக் கொண்டுவந்தனர். நான் அதற்கு எதிராக நின்றேன். இதனை நிறைவேற்ற மூன்று மாதங்கள் அமைச்சரவையில் முயற்சித்தனர். நான் அதற்கு இடமளிக்கவில்லை.

அன்று அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்கள் வங்கியும், இலங்கை வங்கியும், என்.எஸ்.பீ. வங்கியும் மூட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்றும் பேசியிருந்தார்.

மைத்திரியின் நேற்றைய உரையானது தற்பொழுது தென்னிலங்கையில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

இந்நிலையில் மைத்திரியின் நேற்றைய உரை தொடர்பில் இன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்தக் கூட்டம் இன்று காலை இடம்பெறுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விமர்சனத்தை உண்டாக்கிய ஜனாதிபதியின் நேற்றைய தின உரை தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மைத்திரியின் நேற்றைய உரையினால் ஐக்கிய தேசியக் கட்சியினர் பெரும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.

ஏனெனில் அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களையும் மைத்திரி விமர்சனம் செய்திருந்தது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்க்ள தெரிவிக்கின்றன.

SHARE