புஸ்ஸல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான முத்தேர் பவனியில் சுவாமி நகர்வலம் நடைபெற்றது. இதன்போது மேள வாத்தியம் உட்பட கலை கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. குறிப்பாக சிறார்கள் ஆடி மகிழ்ந்தனர். பெருந்திரளான பெண்கள் வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களின் ஹரோஹரா சத்தம் வானை பிளந்தன. தண்ணீர் பந்தல்களும் அமைக்கப்பட்டிருந்தன. நகரத்தின் இரு புறங்களிலும் முத்தேர் பவனி வரும் தெய்வங்களுக்கு பூஜைகளை வழங்கினர். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் இன்று அதிகாலை (10) ஆலயத்தை வந்தடைந்தது.