
நடிகை அனுஷ்கா பலரின் பொய்யான பேச்சுக்களை நம்பி பல கோடிகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகைகள் சினிமாதுறையில் சம்பாதிக்கும் பணத்தை வேறு ஒரு தொழில் முதலீடு செய்கிறார்கள். அந்தவகையில் நடிகை அனுஷ்கா ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு படுக்கை அறை கொண்ட வீட்டை அனுஷ்கா வாங்கி இருந்தார். தெலுங்கானா விவகாரம் தலை தூக்கியபோது சொத்துகள் விலை இறங்கி விடும் என்று அனுஷ்காவை சிலர் பயமுறுத்தினர். இதனால் அந்த வீட்டை 5 கோடி ரூபாய்கு விற்று விட்டார். வீட்டின் அப்போதையை மதிப்பு 10 கோடி எனக் கூறப்படுகிறது.
இவ்வாறே விசாகப்பட்டினத்தில் தான் வாங்கிய நிலங்களை 80 சதவீதம் குறைந்த விலைக்கு விற்றுள்ளதாகவும், இதனால் பல கோடி ரூபாய் நஷ்டமடைந்துள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.