பிரபுதேவா நடிப்பில் இந்த வாரம் குலேபகாவலி படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் இவர் பல சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.
இதில் படம் இயக்குவது குறித்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளேன், கண்டிப்பாக மீண்டும் படம் இயக்குவேன்.
மேலும், சல்மான் கான் நடிக்கவிருக்கும் தபாங் படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கும் பேச்சு வார்த்தையும் நடந்து வருகின்றது என பிரபுதேவா கூறியுள்ளார்.
தபாங் முதல் இரண்டு பாகங்களும் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.