தமிழ் சினிமாவில் 80, 90களில் நடித்த பல நடிகர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவ்வப்போது வறுமையால் கஷ்டப்படும் பிரபலங்களுக்கு நடிகர் சங்கம் உதவி செய்து வருகிறது.
அப்படி குடும்ப சூழ்நிலையால் மெரினா கடற்கரையில் பிச்சை எடுத்து வந்ததாக நடிகர் சங்கத்திற்கு தகவல் வந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் விசாரிக்கையில் படங்கள் நடிப்பதன் மூலம் வரும் 500 ரூபாய் போதவில்லை என்பதால் அவர் மெரினா கடற்கரையில் சின்ன சின்ன பொருட்கள் விற்று வருகிறாராம்.
தற்போது ரங்கம்மாள் பாட்டி மோசமான நிலையில் இருப்பதால் அவருக்கு நடிகர் சங்கம் ரூ. 5000 கொடுத்துள்ளனர்.