நீதிமன்றங்களில் பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக 24 பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த சந்தே நபரை வீரகெட்டிய -பஸ்மன்சந்தி பிரதேசத்தில் வைத்து தங்கல்லை குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர் வீரகெட்டிய -எலம்பவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை தங்கல்லை, வலஸ்முல்ல, எம்பிலிப்பிட்டிய, மாத்தறை, தெய்யந்தர, மாரவில, அகுனுகொலபெலஸ் ஆகிய நீதவான் நீதிமன்றங்களால் குறித்த சந்தேக நபருக்கு எதிராக பிடிவிராந்துகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபரை இன்றைய தினம் வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தங்கல்லை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.