பளிச் சிரிப்பு.. அழகிய ஹேர்ஸ்டைல்: பாரிஸ் ‘பேஷன் ஷோ’வில் ரசிகர்களை மயக்கிய மரியா ஷரபோவா

337

கவர்ந்திழுக்கும் அழகால் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா.

ரஷ்யாவின் அழகுப் புயலாக வலம் வரும் மரியா, கடந்த 2005ம் ஆண்டு உலக தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை பிடித்தார். இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள இவர், தற்போது 3வது இடத்தில் உள்ளார்.

தற்போது ஓய்வில் இருக்கும் மரியா, பாரிசில் நடந்த ‘பேஷன் ஷோவில்’ பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கருப்பு, வெள்ளை நிறத்தில் அழகிய ‘கவுன்’ அணிந்து பங்கேற்றார்.

தனது சூப்பரான ‘ஹேர் ஸ்டைல்’, பளிச் சிரிப்பால் ரசிகர்களை மயக்கினார். இவர் அணிந்த உடைக்கும் மவுசு அதிகரிக்க மகிழ்ச்சியில் திளைத்தாராம்.

இது பற்றி அவர் கூறுகையில், “நான் விதவிதமான ஆடைகள் வைத்திருக்கிறேன். ஆடை விடயத்தில் நல்லது, கெட்டது பார்க்க மாட்டேன். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான ரசனை இருக்கும்.

மேலும், பிரான்ஸில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்றது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

SHARE