பளு தூக்கல் போட்டியில் வவுனியா மாணவிகள் சாதனை

191

யாழ்/மத்திய கல்லூரியில் 09.08.2023 அன்று நடைபெற்ற வட மாகாண ரீதியிலான பாடசாலை மட்ட பளு தூக்கல் போட்டியில், வவுனியா மாணவிகள் பங்குபற்றி சாதனை படைத்துள்ளனர்.

வ/இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவிகள், இரண்டு தங்க பதக்கங்களும், ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களின் பொறுப்பாசிரியர் நடோஜினி.

வ/பெரிய கோமரசங்குள மாணவிகள் இருவர் பங்குபற்றி, ஒரு வெள்ளி பதக்கமும், ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களின் பொறுப்பாசிரியர் அம்பிகா (coach).

சாதனை படைத்த மாணவிகள் அனைவருக்கும், மாணவிகளின் பொறுப்பாசிரியர்களுக்கும், இம் மாணவர்களை பயிற்றுவித்த ஞா.ஞானகீதன் அவர்களுக்கும், தினப்புயல் சார்பாக வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

SHARE