யாழ்ப்பாணம், பளை, வண்ணாங்கேணிப் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை 9.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்திற்குச் சென்று, திரும்பிக் கொண்டிருந்தவர்களின் வாகனம் குடை சாய்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.