கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகஸ்காரில் கிறிஸ்துவ பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று மலைப்பாதையில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 34 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடு மடகஸ்கார். இந்நாட்டின் மத்திய நகரமான சோயவினான்டிரியனாவில் இருந்து வடமேற்கு கடற்பகுதி துறைமுக நகரான மகாஜங்கா என்ற இடத்திற்கு கிறிஸ்துவ விழாவில் கலந்து கொள்வதற்காக பக்தர்கள் பேருந்து ஒனறில் சென்று கொண்டிருந்தார்கள்.
இந்த பேருந்தானது மலைப்பகுதியில் ஏறிக்கொண்டிருக்கும்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.
சுமார் 20 மீற்றர் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தானது பலமுறை உருண்டதில் தீப்பற்றி எரிந்தது. இதில் 12 பேர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மடகஸ்கார் நாட்டில் சாலை பராமரிப்பு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் திருமண குழுவினரை ஏற்றிச்சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.