பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை உற்பட 6 பேர் கைது-பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு.

418

 

மைக்கில் காந்தன்
சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் உற்பட 6 பேரை பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று  (3)  சனிக்கிழமை காலை 10 மணியளவில் கைது செய்துள்ள நிலையில் குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரனைகளை மேற்கொள்ள மன்னார் நீதிமன்றம் இன்று (40) ஞாயிற்றுக்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளது.
unnamed (1) unnamed (2) unnamed
-கைது செய்யப்பட்ட இந்திய பிரஜை ஒருவர்  உற்பட்ட 6 சந்தேக நபர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை(4)  மாலை மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போதே மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
-மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் உற்பட 6 சந்தேக நபர்களை நேற்று சனிக்கிழமை (3) காலை 10 மணியளவில் கடற்படையினர் கைது செய்துள்ள நிலையில் வவுனியா விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
-இதன் போது இந்திய பிரஜை ஒருவரும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 5 பேர் உள்ளடங்களாக 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் வனியா விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் பெறுமதியான 2.24 கிலோ கிராம் எடை கொண்ட ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரூம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(4) மாலை மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த 6 சந்தேக நபர்களையும் ஆஜர் படுத்திய போது குறித்த நபர்களை எதிர்வரும் 9 ஆம் திகதி (09-09-2016) வெள்ளிக்கிழமை வரை பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரனைகளை மேற்கொள்ள நீதவான் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா விசேட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

 

SHARE