பழமை வாய்ந்த பிரதேசம் கண்டுபிடிப்பு

134

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதுவரையில் பல்வேறு பழமை வாய்ந்த இடங்களை கண்டுபிடித்துள்ளனர்.

இதில் சில மக்கள் கூடி வாழும் பகுதிகளிலேயே இருந்த போதிலும் இரகசியமாக காணப்பட்டுள்ளன.

இவ்வாறே ஈராக்கின் Mosul பகுதியிலும் பழமை வாய்ந்த பிரதேசம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப் பிரதேசமானது சுமார் 2,600 வருடங்கள் பழமை வாய்ந்ததாக இருப்பதுடன், வழிபாட்டு ஸ்தலம் ஒன்றின் கீழாக அமைந்துள்ளது.

குறித்த வழிபாட்டு ஸ்தலாமனது ISIS தீவிரவாதிகளால் 2014ம் ஆண்டு தகர்க்கப்பட்ட போதிலும், அதன் கீழ்ப் பகுதியில் காணப்பட்ட பிரதேசம் சேதமடையாமல் உள்ளது.

இப் பிரதேசம் முற்றாக அழிவடைய முன்னர் அங்குள்ள பொக்கிஷங்களை பாதுகாப்பதில் உள்ளூர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

SHARE