பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப்பில் 41வயது நடிகையுடன் நடிகர் விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

115

 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கும் நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் First லுக் போஸ்டர் வருகிற புத்தாண்டு அன்று வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

நடிகர் விஜய் மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை.

பலரும் பார்த்திராத புகைப்படம்
இந்நிலையில், இப்படத்தில் இருந்து அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் மற்றும் நடிகை ஸ்ரேயா இருவரும் பவர் ரேஞ்சர்ஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், இப்படியொரு காட்சி அழகிய தமிழ் மகன் படத்திலேயே இல்லையே என கூறி வருகிறார்கள்.

SHARE