பஷீரின் அறிக்கையும் ஹக்கீமின் அச்சமும்

195

எஸ்.றிபான் – 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­லிருந்து விடு­பட்டு கட்­சியை தூய்­மைப்­ப­டுத்தும் பணியில் ஈடு­பட இருப்­ப­தாக அறிக்கை ஒன்றின் ஊடாக நாட்டு மக்­க­ளுக்கு தெரி­வித்­துள்ளார். இவரின் இந்த அறி­விப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் காணப்­படும் முரண்­பா­டு­களை கூர்­மை­யடைச் செய்யும் எனலாம். மேலும், தலைவர் ரவூப் ஹக்­கீமின் தலை­மைத்­துவப் பத­விக்கு பெரும்­ச­வால்கள் அதி­க­ரிக்­கலாம்.


பசீர் சேகு­தாவூத் தமது அறிக்­கையில், ‘எனது தனிப்­பட்ட அர­சியல் நம்­ப­கத்­தன்­மையைக் காத்­துக்­கொள்ளும் வகையில் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் இனி­யொ­ரு­போதும் ஈடு­ப­டு­வ­தில்லை என்ற கடி­ன­மான முடி­வுக்கு வந்­துள்ளேன். சம­கால முஸ்லிம் அர­சி­யலில் பத­வி­களைப் பெறும் இலக்­கு­க­ளற்ற ஒரு பாத்­தி­ரத்தின் மூலம் செய­லாற்ற முடி­வெ­டுத்­துள்ளேன். பிர­தி­நி­தித்­துவ அர­சி­யல்­வா­தி­யாக அன்றி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் ஒரு கடை­நிலை உறுப்­பி­ன­ரா­க­வேனும் இருந்து கட்­சியைத் தூய்­மைப்­ப­டுத்தும் பணியில் தீவி­ர­மான அர­சியல் செயல்­பாட்­டா­ள­னாக எனது எஞ்­சிய வாழ்நாள் நெடு­கிலும் இருக்க விரும்­பு­கிறேன்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

மேலும் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது, ‘பாராளு­மன்றம், மாகா­ண­சபை உள்­ளிட்ட எந்­த­வொரு தேர்­த­லிலும் இனி­வரும் காலத்தில் ஒரு வேட்­பா­ள­ராக பங்­கு­பற்றப் போவ­தில்லை என்றும், எந்­த­வொரு கட்­சியின் தேசி­யப்­பட்­டி­ய­லிலோ, அல்­லது எதிர்­கா­லத்தில் தேர்தல் சட்­டங்­களில் ஏற்­படும் மாற்­றங்­க­ளினால் வரும் வேறு ஏதேனும் முறை­யிலோ பாரா­ளு­மன்­றத்­திற்கோ மாகாண சபைக்கோ மக்கள் பிர­தி­நி­தி­யாக செல்­லப்­போ­வ­தில்லை என்­ப­தையும் பகி­ரங்­க­மாக அறி­யத்­த­ரு­கிறேன்’ எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இவரால் ஏற்­க­னவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்கு எழு­தப்பட்ட கடிதம் அக்­கட்­சியின் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளி­டையே பெரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில் தற்­போது அவர் வெளி­யிட்­டுள்ள பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­ருந்து விடு­பட்டு கட்­சியை தூய்­மைப்­ப­டுத்­து­வ­தற்­கான போராட்­டத்தில் ஈடு­பட இருப்­ப­தாக தெரி­வித்­துள்ள அறிக்­கை­யா­னது தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு ஏற்­க­னவே இருக்­கின்ற அழுத்­தங்­களை அதி­க­ரிக்கச் செய்­வ­தாக இருக்கும் என்­பதில் ஐய­மில்லை. இதே வேளை, தலைவர் ஹக்­கீமை தற்­போது வழி­ந­டாத்திக் கொண்­டி­ருப்­ப­வர்­க­ளுக்கு அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். ஹக்­கீமை வழி நடாத்­து­வ­தற்கு காலத்­திற்கு காலம் ஒரு குழு­வினர் செயற்­பட்டு வந்­துள்­ளார்கள். இன்று புதிய குழு­வினர் அவரை வழி நடத்திக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

கட்­சியின் தலை­வ­ருக்கு எதி­ராக செய­லாளர் எம்.ரி.ஹஸன்­அ­லியை தவி­சாளர் பசீர் சேகு­தா­வூத்தான் வழி நடத்திக் கொண்­டி­ருக்­கின்றார். அவர் ஹஸன்­அ­லிக்கு பின்னால் மறைந்­தி­ருந்து தேசிய பட்­டி­யலில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை பெற்றுக் கொள்­வ­தற்கு சதி வலை பின்னிக் கொண்­டி­ருக்­கின்றார் என்­ற­தொரு பிரச்­சா­ரத்தை தலைவர் ரவூப் ஹக்கீம் சார்­பா­ன­வர்கள் மேற்­கொண்­டி­ருந்த சூழலில் பசீர் சேகு­தா­வூத்தின் அறிக்கை அவர்­களின் பிரச்­சா­ரத்­திற்கு புளியை கரைத்­துள்­ளது.

இந்தப் பிரச்­சா­ரத்தை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தற்­கா­கவே பசீர் சேகு­தாவூத் பிர­தி­நி­தித்­துவ அர­சி­ய­லி­ருந்து விடு­பட்­டுள்ளார் என்­ப­தனைக் காட்­டு­கின்­றது. இதனை அவரின் அறிக்கை தெளி­வாகக் காட்­டு­கின்­றது. அதா­வது, எனது தனிப்­பட்ட அர­சியல் நம்­ப­கத்­தன்­மையைக் காத்­துக்­கொள்ளும் வகையில் பிர­தி­நி­தித்­துவ அர­சி­யலில் இனி­யொ­ரு­போதும் ஈடு­ப­டு­வ­தில்லை என்ற கடி­ன­மான முடி­வுக்கு வந்­துள்ளேன் என்று தெரி­வித்­துள்­ளதன் மூல­மாக அவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியை சம்­பந்­தப்­ப­டுத்தி தனக்கு எதி­ரான பிரச்­சா­ரத்­திற்கு முடிவு கட்­டி­யுள்ளார்.

மறு பக்­கத்தில் ரவூப் ஹக்­கீமின் தலை­மைத்­துவ பத­விக்கும் சவாலை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார். அவர் கடந்த 22.06.2016 புதன் கிழமை விடி­வெள்­ளிக்கு கருத்துத் தெரி­விக்­கையில், புதி­ய­வர்­க­ளுக்கு இட­ம­ளிக்கப் போவ­தா­கவும், அதற்­கான போராட்­டத்தை மேற்­கொள்ள இருப்­ப­தா­கவும் தெரி­வித்­துள்ளார். ரவூப் ஹக்கீம் பத­வி­களை தாராளத் தன்­மை­யுடன் விட்டுக் கொடுப்­போடு பகிர்ந்து கொள்ள வேண்­டு­மென்று கடந்த வாரத்திலிருந்து தான் கலந்து கொள்ளும் நிகழ்­வு­களில் தெரி­வித்துக் கொண்டு வரு­கின்றார். அதனை முதலில் பசீர் சேகு­தாவூத் செயலில் காட்­டி­யுள்ளார். பசீர் சேகு­தா­வூத்தின் இந்த குணத்தை ஏனை­ய­வர்­களும் வெளிக்­காட்­டுதல் வேண்டும்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் ஒரு சில பினா­மி­களின் பாட்டன் வீட்டுச் சொத்­தல்ல. கட்சி தொடங்­கிய 30 வருட காலத்­திலும் பத­வி­களில் இருந்து சமூ­கத்­திற்கு குரல் கொடுக்­காமல் சுய­லா­பத்­திற்­காக செயற்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­வர்கள் இன்றும் கட்சி மூல­மாக பட்டம், பத­வி­களை பெற்­றுள்­ளார்கள். அவர்கள் தங்­களின் பத­வி­களை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக முண்­டி­ய­டித்துக் கொண்டு மற்­ற­வர்­க­ளுக்கு குழி தோண்டிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

மேலும், சிலர் கட்­சியின் வளர்ச்­சிக்கு எந்­த­வொரு பங்­க­ளிப்­பையும் செய்­யாது பத­வி­க­ளையும், கோட்­டாக்­க­ளையும் அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இன்னும் சிலர் (Kitchen Cabinet) சமையலறை அமைச்­சர்­க­ளாக மு.கா.வுக்குள் இருந்து கொண்டு கட்­சியை தமது தேவைக்­கேற்­ற­வாறு வழி­ந­டத்திக்  கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த சமையலறை அமைச்­சர்­க­ளுக்கு கட்­சியின் போராட்ட வர­லாறு முறை­யாக தெரி­யாது. இன்னும் சிலர் முரண்­பாட்­டா­ளர்­க­ளி­டையே சிண்டு முடித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இவர்­க­ளி­னால்தான் மு.கா. சீர­ழிந்து கொண்­டி­ருக்­கின்­றது.

இதேவேளை, கட்­சிக்கு கடந்த 30 வரு­டங்­க­ளாக அல்லும் பகலும் பாடு­பட்டுக் கொண்­டி­ருக்கும் சிலர் கட்­சி­யினால் எத­னையும் அனு­ப­விப்­ப­தற்கு இட­ம­ளிக்­கப்­ப­டா­துள்­ளது. ஆதலால், கட்­சியில் இது வரை காலம் பத­வி­க­ளையும், சுக­போ­கங்­க­ளையும் அனு­ப­வித்­த­வர்கள் புதி­ய­வர்­க­ளுக்கு வழி விட வேண்டும். புதி­ய­வர்­க­ளா­வது முஸ்லிம் சமூ­கத்தின் உரிமை விட­யங்­களை பாது­காத்துக் கொள்­வ­தற்கும், அபி­வி­ருத்­தி­களை மேற்­கொள்­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள்  எடுப்­பார்­களா என்று பார்க்க வேண்­டி­யுள்­ளது. ஒவ்­வொரு தேர்தல் காலத்­திலும் மு.கா.வில் இன்­றுள்ள பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை மன்­னித்து வாக்­க­ளிக்க முடி­யாது. அவ்­வாறு வாக்­க­ளிப்­பது முட்­டாள்­களின் செய­லாகும். முஸ்லிம் சமூ­கத்தில் துறை­சார்ந்த வல்­லு­நர்கள் பலர் இருக்­கையில் வெறுங் கையுடன் புத்­தி­ஜீ­வி­க­ளற்­ற­தொரு சமூகம் என்று முஸ்­லிம்­களை காட்ட வேண்­டி­ய­தில்லை.  இன்று மு.கா.வில்  அர­சி­யலில் உள்­ள­வர்­களை விடவும் பன்­ம­டங்கு சமூ­கத்தைப் பற்றி சிந்­திக்கக் கூடிய, செய­லாற்றக் கூடிய பலர் முஸ்­லிம்­களில் உள்­ளார்கள். ஆதலால், புதி­ய­வர்­க­ளுக்கும், இளை­ஞர்­க­ளுக்கும் முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் பொறுப்பை கைய­ளிக்க இன்­றுள்­ள­வர்கள் முன் வருதல் வேண்டும். இதனை முதலில் செயலில் காட்­டி­யுள்ள பசீர் சேகு­தா­வூத்­திற்கு நன்­றி­களை தெரி­விக்க முஸ்லிம் சமூகம் கட­மைப்­பட்­டுள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்தின் அர­சியல் பலம் சுய­நல கும்­பலின் கைக­களில் மாட்­டி­யுள்­ளது. இத­னால்தான் மு.கா.விற்கு கிழக்கில் தலைமை உரு­வாக்­கப்­பட வேண்­டு­மென்ற கோரிக்­கைகள் எழுந்து கொண்­டி­ருப்­ப­தற்கும் கார­ண­மாகும். இக்­கோ­ரிக்கை நீண்ட கால அவ­தா­னிப்பின் எழுச்­சி­யாகும். இதே வேளை, இக்­கோ­ரிக்­கையை நியா­யப்­ப­டுத்தும் வகையில் தலைவர் ஹக்­கீமை சுற்­றி­யுள்ள பினா­மி­களின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளன. அவர்கள் ஹக்­கீ­முடன் விசு­வா­ச­மாக உள்­ள­வர்­க­ளிடம் கூட கிண்­ட­லாக நீங்கள் கிழக்­கிற்கு தலைமை வேண்­டு­மென்று கேட்­கின்­றீர்கள். உங்­க­ளினால் முடி­யுமா? உங்­க­ளிடம் தலை­வர்கள் உள்­ளார்­களா? உங்­க­ளுக்கு நாங்கள் உதவி செய்ய வேண்­டு­மென்று சொல்லிக் கொள்­கின்­றார்­களாம்.

இத்­த­கை­ய­வர்கள் மு.கா. எனும் ஆல­வி­ருட்­ச­மான கட்­சியை ஆரம்­பித்து அக்­கட்­சியின் கீழ் அதி­க­பட்­ச­மான முஸ்­லிம்­களை ஒன்று திரட்­டிய பெரு­மையும் கிழக்கு மண்ணில் பிறந்த மர்ஹூம் எம்.எச்எம்.அஸ்­ரப்­பையே சாரும் என்ற உண்­மையை மறந்து விட முடி­யாது. அவரின் அந்த முயற்­சி­யி­னால்தான் இன்று பாரா­ளு­மன்ற கதி­ரையை கனவில் கூட நினைத்துக் கொள்ள முடி­யா­த­வர்கள் பாரா­ளு­மன்­றத்­திற்கு சென்­றுள்­ளார்கள். இதனை கிழக்கு வாதம் என்று கருத முடி­யாது. கிழக்கை புறக்­க­ணிக்கும் பினா­மி­களின் புரி­த­லுக்­காக என்­ப­தனை தெரி­வித்துக் கொள்­கின்றேன். மு.கா.விற்கு யாரும் தலை­வ­ராக இருக்­கலாம். ஆனால், அவர் முஸ்­லிம்­களின் தலை­வ­ராக செயற்­பட வேண்டும்.

இன்­றுள்ள முஸ்லிம் தலை­வர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சமூ­கத்தைப் பற்றி சிந்­திப்­ப­தில்லை. அவர்கள் பத­வி­களைப் பற்­றியே சிந்­திக்­கின்­றார்கள். யாரா­வது ஒருவர் இவர்­களின் ஒவ்­வாத நட­வ­டிக்­கை­களை சுட்டிக் காட்­டினால், விமர்­சித்தால் அவர்­களை கட்­சிக்கு எதி­ரா­ன­வர்கள் என்று காட்­டு­வ­தற்கு எடுக்கும் பிர­யத்­தனம் சொல்லில் அடங்­காது. இத­னையும் பசீர் சேகு­தாவூத் தமது அறி­கையில் தெரி­வித்­துள்ளார். அதா­வது, முஸ்லிம் அர­சியல் பிர­மு­கர்கள் அனை­வரும் சமு­தாய ஈடேற்றம் பற்­றிய பிரக்­ஞை­யற்று பத­வி­க­ளையும், சலு­கை­க­ளையும் சௌக­ரி­யங்­க­ளையும் குறி­வைத்தே அர­சி­யலில் ஈடு­ப­டு­கி­றார்கள் என்ற விமர்­சனம் முஸ்லிம் குடிமைச் சமூ­கத்தால் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது.

இது­மாத்­தி­ர­மன்றி எந்­த­வொரு அர­சியல் கட்­சி­யிலும் எவரும் நேர்­கோட்டை வரைய முற்­ப­டு­கின்ற போதெல்லாம் பத­வி­களை நாடிய மூன்­றாந்­தர நட­வ­டிக்­கை­க­ளாக அவை சோடித்துக் காட்­டப்­பட்டு நேரிய மாற்­றங்­க­ளுக்­கான முயற்­சிகள் தோற்­க­டிக்­கப்­ப­டு­கின்­றன எனத் தெரி­வித்­துள்ளார். இதற்­காக பசீர்­சேகு தாவூத் ஒரு உத்­தமர் என்று சொல்ல முற்­ப­ட­வில்லை. அவ­ரது கருத்­துக்­களில் உள்ள உண்­மை­களை தொட்­டுக்­காட்ட விளை­கின்றேன்.

மு.கா.வின் தலைவர் ஹக்கீம் பத­வி­களை விட்டுக் கொடுத்து தாராளத் தன்­மை­யுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரி­வித்துக் கொண்­டி­ருப்­பது வர­வேற்­கத்­தக்­க­தாகும். கடந்த பொதுத் தேர்­தலில் தோல்­வி­ய­டைந்­த­வர்­க­ளுக்கு தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியும், கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளினால் நிரா­க­ரிக்­க­பட இருந்­த­வர்­களை தேர்­தலில் போட்­டி­யிடச் செய்து மக்­களின் விருப்பத் தெரி­வுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து அவர்­களை மீண்டும் பாரா­ளு­மன்ற அனுப்­பி­யமையும் எந்த வகையில் தாராளத் தன்­மை­யாக அமையும்? தாராளத் தன்மை என்­பது பத­வி­களை விட்டுக் கொடுப்­பது என்­ப­தனை விடவும், மக்­களின் செல்­வாக்கை இழந்து கொண்­டி­ருப்­ப­வர்கள் தாராள மனத்­தோடு விலகிக் கொள்­வதே சிறந்­தாகும். இதற்கு மாற்­ற­மாக கட்­சிக்குள் சிலரை ஒதுக்கி வைப்­ப­தற்­காக தராளத் தன்மை என்ற பதம் கையா­ளப்­ப­டு­மாயின் தலைவர் பத­வியையும் தாராளத் தன்­மை­யுடன் விட்டுக் கொடுக்க வேண்டும்.

மஹிந்­த­ரா­ஜ­பக்ஷ அர­சாங்­கத்தின் காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு பல துன்­பங்கள் ஏற்­பட்­டன. அவற்றை இல்­லாமல் செய்­வ­தற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் உட்­பட எந்த முஸ்லிம் கட்­சியும் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. மு.கா. எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து அர­சாங்­கத்­திற்கு தாவிச் சென்­றது. இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்தின் பக்கம் செல்­வ­தற்கு முற்­பட்­டார்கள். கட்­சியை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக படு­கு­ழியில் விழுந்­துள்ளோம் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கட்­சியின் தன்­மா­னத்தை அடகு வைப்­ப­தற்கு முற்­பட்­ட­வர்­க­ளுக்கு கடந்த பொதுத் தேர்­தலில் வாய்ப்பு வழங்­கி­யமை எதற்­காக? இதுவும் தாராளத் தன்­மையா? இந்த வாய்ப்புக் கூட கட்­சியை பாது­காத்துக் கொள்­வ­தற்­கான நட­வ­டிக்கை என்­றுதான் சொல்­லப்­ப­டு­கின்­றது. அப்­ப­டி­யாயின் இன்­றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில்தான் கட்சி தங்­கி­யுள்­ளதா என்று கேட்­கின்றோம்.

கடந்த காலங்­களில் கட்­சியை விட்­டுப்­பலர் சென்ற போது கட்­சியை பாது­காத்துக் கொள்­வ­தற்கு மக்கள் உள்­ளார்கள் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஏன் இன்று கட்­சியை பாது­காத்துக் கொள்­வ­தற்கு மக்கள் உள்­ளார்கள் என்று சொல்ல முடி­ய­வில்லை. கட்­சியை பாது­காத்துக் கொள்ள வேண்­டு­மென்ற மந்­திர வார்த்­தைக்குப் பின்னால் உள்ள சுய­நலம் என்­ன­வென்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.முரண்­பா­டு­களின் கூடா­ர­மாக இருக்­கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தமக்குள் காணப்­படும் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பதவிப் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு ஒரு வருடம் கழிந்தும் முடி­யாது திண்­டாடிக் கொண்­டி­ருக்­கின்­றது. கட்­சியின் செய­லாளர் மற்றும் தவி­சாளர் ஆகி­யோர்கள் தலை­வ­ருடன் முரண்­பா­டு­க­ளுடன் உள்­ளார்கள்.

பிர­தே­சங்­களில் உள்ளூர் அமைப்­பா­ளர்கள், மக்கள் பிர­தி­நி­திகள் மற்றும் பிர­மு­கர்­க­ளி­டையே பலத்த முரண்­பா­டு­களும், பிள­வுகள் காணப்­படும் நிலையில் சமூகம் சார்ந்த மாற்றுக் கட்­சி­களில் உள்­ள­வர்கள் அனை­வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸுடன் இணைந்து கொள்­ளு­மாறு ரவூப் ஹக்கீம் அழைப்பு விடுத்­துள்­ளமை எந்த வகையில் சாத்­தி­ய­மாகும். முதலில் வீட்டைச் சுத்­தப்­ப­டுத்த வேண்டும். பின்னர் சுற்றுப் புறச் சூழலை சுத்­தப்­ப­டுத்த வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் எனும் வீட்­டுக்குள் அசுத்­தங்­களும், ஆர­வா­ரங்­களும் காணப்­ப­டு­வ­தனை எப்­போது இல்­லாமல் செய்­வது? இதனைச் செய்­யாது விடுக்­கப்­படும் அழைப்­புக்கள் வீண் வார்த்­தை­க­ளாகும்.

கடந்த காலங்­களில் அதா­வது கட்­சியின் செய­லாளர் ஹஸன்­அலி, தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் ஆகி­யோர்கள் தலைவர் ரவூப் ஹக்­கீ­முடன் பிரி­ய­மாக இருக்­கின்ற போதே கட்­சியின் கட்­ட­மைப்பு சீர்­கு­லைந்து காணப்­பட்­டது. இது பற்றி கட்­சியின் அடி­மட்ட போரா­ளிகள் முதல் செயற்­பாட்டு உறுப்­பி­னர்கள் வரை கேள்வி கேட்ட போதெல்லாம் கட்­சியின் கட்­ட­மைப்பு இந்த வரு­டத்­திற்குள் புன­ர­மைக்­கப்­படும், இன்னும் மூன்று மாதங்­களின் பின்னர் புன­ர­மைக்­கப்­படும், பொதுத் தேர்தல் முடிந்­ததும் புன­ர­மைக்­கப்­படும், தேர்தல் முடிந்­ததும் வீட்­டுக்­கு­வீடு முஸ்லிம் காங்­கிரஸ் என்­றெல்லாம் தெரி­விக்­கப்­பட்­டதே அன்றி நிறைவு செய்து காட்­டப்­ப­ட­வில்லை.

இதனால், கட்­சியின் கட்­ட­மைப்பு வெகு­வாக பாதிக்­கப்­பட்­டது. இன்று கட்­சியின் கட்­ட­மைப்பு படு­மோ­ச­மா­க­வுள்­ளது. தலை­வ­ருடன் ஒரு கூட்டம். தவி­சாளர் மற்­றொரு பக்கம், செய­லாளர் இன்­னு­மொரு திசையில் என்று ஆளுக்கு ஆள் குழுக்­களை வைத்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். கட்­சியின் கட்­ட­மைப்பு அதன் 30 வருட கால வர­லாற்றில் என்­று­மில்­லாத வகையில் பாதிக்­க­பட்­டுள்­ளது. இது சரி செய்­யப்­ப­டாது போனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இன்று தேசிய கட்­சியில் சங்­க­மித்து மறைந்து கொண்­டி­ருக்கும் நிலையே நிரந்­த­ர­மா­கி­விடும்.  இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை தேசிய கட்­சியில் குறிப்­பாக ஐ.தே.கவுடன் முழு­மை­யாக சங்­க­மிக்க வைத்­து­விட்டு தங்­களின் அர­சி­யலை நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்கு எடுக்கும் முயற்­சி­களும் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.

அவர்­களைப் பொறுத்­த­வரை கிழக்கு மாகா­ணத்­திற்­குத்தான் முஸ்லிம் காங்­கிரஸ் பொருத்தம். இதற்கு அப்பால் தேசிய கட்­சி­க­ளில்தான் முஸ்­லிம்கள் அர­சியல் செய்ய வேண்­டு­மென்று எண்­ணு­கின்­றார்கள். இதில் யதார்த்தம் இருந்­தாலும் கிழக்கு முஸ்­லிம்­களின் அர­சியல் பலம் ஏனைய மாகாண முஸ்­லிம்­களின் பாது­காப்­புக்கும், அபி­வி­ருத்­தி­க­ளுக்கும் அவ­சி­ய­மாகும் என்­ப­தனை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சில­ருக்­காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் இயங்­கு­வ­த­னையும், ஒரு சில­ருக்­காக முஸ்லிம் காங்­கி­ரஸை அழிப்­ப­த­னையும் ஏற்றுக் கொள்ள முடி­யா­தென்­பதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உண்மைப் போரா­ளி­களின் எண்­ண­மாகும்.

இதே வேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் ஏற்­பட்­டுள்ள சுய­நலம் கலந்த முரண்­பா­டு­களை தீர்ப்­ப­தற்கு மற்­று­மொரு சுய­நலக் கும்பல் ரவூப் ஹக்­கீமின் கைகளை கட்டிப் போட்­டுள்­ளதால் கட்­சிக்­குள்ளும், கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளி­டை­யேயும் அஸ்ரப் சார்புக் காரர்கள், ரவூப் ஹக்கீம் சார்­புக்­கா­ரர்கள் என்ற பெரிய பிளவு ஏற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.ர்புக் காரர்கள், ரவூப் ஹக்கீம் சார்புக்காரர்கள் என்ற பெரிய பிளவு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதனை நிவர்த்தி செய்ய வேண்டுமானால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சுற்றியுள்ள சகல சுயநல முட்கம்பி வேலிகளும் அகற்றப்பட வேண்டும்.

SHARE