பஸில் ராஜபக்சவுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க இடமளிக்க மாட்டோம்!

270

மஹிந்த, நாமலுக்கு கட்சியில் முன்னுரிமை வழங்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்வோம். ஆனால், பஸில் ராஜபக்சவுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க நாங்கள் இடமளிக்க மாட்டோம். மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க முடியாது  என்று என்றும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறியதாவது:-

கட்சித் தீர்மானங்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டாலும் அதனை நடைமுறையில் செயற்படுத்த முடியாது.

நாங்கள் சண்டை பிடித்துக் கொண்டாலும் தேர்தலில் ஒன்றாக இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவே செயற்படுவோம்.

மஹிந்த ராஜபக்ச கட்சிக்கு எதிராக கருத்துத் தெரிவிப்பதற்காக நாங்கள் எதனையும் கூற முடியாது. அவரது ஆட்சிக்காலத்தில் இல்லாத விமர்சிக்கும் சுதந்திரம் இன்று உள்ளது. அதனை அவரும் அனுபவிக்கின்றார்.

மஹிந்த, நாமலுக்கு கட்சியில் முன்னுரிமை வழங்கப்படுமாயின் அதனை ஏற்றுக்கொள்வோம். ஆனால், பஸில் ராஜபக்சவுக்கு கட்சிக்குள் முன்னுரிமை வழங்க நாங்கள் இடமளிக்க மாட்டோம். மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க முடியாது. என்றார்.

அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனோ எமக்கு திருமண பந்த உறவு கிடையாது என்றும், கட்சியின் தேவை, நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளவே அரசுடன் இணைந்தோம் என்றும், அதனை நிறைவேற்றிக் கொண்ட பின்னர் அரசை விட்டு வெளியேற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராகவே உள்ளது என்றும் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார்.

SHARE