கண்டி மகியங்கனை பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலைக்கு பெண்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளார்.
மகியங்கனை பிபிலை வீதியில் மாப்பாக்கடை என்ற பகுதியில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் ஒருவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவரது கவனயீனம் காரணமாகவே குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மகியங்கனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.