பஸ் சக்கரத்தில் சிக்குண்ட மாணவி வைத்தியசாலையில்

277
காலியிலிருந்து எல்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்து பாடசாலை மாணவியொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவி உடுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் கராபிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மீட்டியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த மாணவி பஸ்ஸின் முன்பக்க கதவில் ஏறியதாகவும், பஸ்ஸிலிருந்து தவறி வீழ்ந்த மாணவி பஸ்ஸின் பின்புற சக்கரத்தில் சிக்குண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அவர் தற்போது சத்திர சிகிச்சையொன்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE