பாகிஸ்தானின் குவேட்டா நகரில் உள்ள வைத்தியசாலைக்கு அருகில் இன்று இடம்பெற்றகுண்டுவெடிப்பில் 43 பேர் பலி!

261

பாகிஸ்தான் நாட்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பயங்கர வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 43 பேர் பலியாகியுள்ளதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தென் மேற்கு பாகிஸ்தானில் உள்ள Quetta என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த திங்கள் அன்று Bilal Anwar Kasi என்ற வழக்கறிஞர் கொடூரமாக சுட்டு கொல்லப்பட்டார்.

இவரது சடலம் இன்று இம்மருத்துவமனைக்கு கொண்டு வந்த நேரத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

தற்போது வரை வெளியாகியுள்ள தகவலில் 43 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்டவர்களில் பிலாலின் சடலத்தை கொண்டு வரும்போது, கூட இருந்தவர்களில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊடக நிருபர்கள் அடங்குவர்.

மேலும், பொலிசார் நடத்திய விசாரணையில் இது ஒரு தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்றும், இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் இதற்கு பொறுப்பேற்கவில்லை என தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் நிகழ்ந்த இந்த கொடூர தாக்குதலை தொடர்ந்து ‘பொதுமக்களின் அமைதிக்கு ஆபத்து விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SHARE