இங்கிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு சொற்பமாகும்.
உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டிகள் முடிவுக்கு வருகின்றன. இன்று அவுஸ்திரேலியா – வங்கதேசம், இங்கிலாந்து – பாகிஸ்தான் என இரண்டு போட்டிகள் நடக்கின்றன.
இதில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஏறக்குறைய அரையிறுதி வாய்ப்பு பாகிஸ்தானுக்கு மங்கிவிட்டாலும், அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல முடியும்.
அதாவது, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடினால் இங்கிலாந்தை 287 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அல்லது இரண்டாவதாக துடுப்பாடும் பட்சத்தில் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்துவிட வேண்டும்.
இதனால் தான் அதிசயம் நிகழ வேண்டும். இதற்கிடையில் இங்கிலாந்து இப்போட்டியில் வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெற்றுவிடும்.