பாகிஸ்தான் அணியின் மோசமான மறுபக்கத்தை வெளியிடுவேன்: அப்ரிடி மிரட்டல்

279

download

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட்டு மிக மோசமாக உள்ளது என்று அப்ரிடி கூறியுள்ளார்.

பாகிஸ்தான் டி20 அணியின் தலைவரான அப்ரிடி தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச அளவில் திறமை வாய்ந்த வீரர்களை எடுப்பதில்லை என்றும், நிறைய தவறுகளை செய்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நடந்து முடிந்த உலகக்கிண்ண டி20 போட்டியில் தான் சிறப்பாக செயல்பட்டதால் டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து ஒய்வு பெறவில்லை. அணியில் இருந்து விலகும் போது சிறந்த அணியாக மற்றும் தகுதியானதாக இருக்க வேண்டும்.

அப்படி கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்று விட்டால், பாகிஸ்தானில் கிரிக்கெட் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்று வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.

SHARE