இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டு வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று காலை கண்டிக்கு விஜயம் செய்துள்ளார்.
கண்டி சென்ற பாகிஸ்தான் பிரதமர் வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகைக்கும் சென்றார். இதனையடுத்து மீரா மக்கம் பள்ளிவாசலுக்கு சென்ற அவர் தொழுகையில் ஈடுபட்டார். இதனையடுத்து கண்டியில் உள்ள ஜின்னா கலாசார நிலையத்திற்கும் பாகிஸ்தான் பிரதமர் சென்றுள்ளார்.
பேராதனை தவரவியல் பூங்காவுக்கு விஜயம் செய்த பாகிஸ்தான் பிரதமர் அங்கு செடி ஒன்றையும் நாட்டினார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இன்று மாலை பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.