பாகுபலிக்கு பின்னால் சிறுவனின் உண்மை சம்பவம்! வைரலாகும் தகவல்

196

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி 2 படம் ரூ 1700 கோடியை தாண்டி வசூல் பார்த்துவிட்டது. அடுத்ததாக விரைவில் சீனாவிலும் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த படம் அதிலிருந்து எடுக்கப்பட்டது, இதிலிருந்து உருவாக்கப்பட்டது என ஏற்கனவே தகவல்களை பரப்பிய நிலையில் இப்போது புதியாக ஒன்றை பரப்பிவருகிறார்கள்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் பாகுபலியை கையில் தூக்கி கொண்டு நீரில் மூழ்கி காப்பாற்றுவது போல இருக்கும். இக்காட்சியை போலவே வங்கதேசத்தில் 2014 ல் கடும் மழை வெள்ளம் வந்தபோது ஆற்றில் ஒரு மான் அடித்து செல்லப்பட்டிருக்கிறது.

அப்பகுதியில் இருந்த சிறுவன் நீரில் மூழ்கி மானை காப்பாற்றியுள்ள. உண்மையில் நடந்த இந்த சம்பவத்தின் புகைப்படம் இப்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

SHARE