பாகுபலி படத்திற்கும் பைரவா படத்திற்கும் என்ன ஒற்றுமை தெரியுமா?

270

625-0-560-320-100-600-053-800-720-160-90-1

பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் பாடல்கள் எதிர்வரும் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு காரணமாக டிசம்பர் ஆரம்பத்தில் வெளியாகவிருந்த படத்தின் பாடல் வெளியீடு தள்ளிப்போனது.

தற்போது பலத்த சேதத்தினை உண்டுபண்ணியுள்ள வர்தா புயல் காரணமாக தொடர் சோகத்தில் முழ்கியுள்ளது தமிழகம்.

இவ்வாறிருக்க படத்தின் இசை வெளியீட்டு விழாவினை மிகவும் எளிமையான முறையில் நடத்த படக்குழு தீர்மானித்துள்ளதாம்.

தற்போது ஆடியோ உரிமைக்கு பல நிறுவங்களிடையில் பலத்தப்போட்டி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் தற்போது பாகுபலி படத்தின் ஆடியோவை வெளியிடும் உரிமையினை பெற்ற லஹரி நிறுவனம் பைரவா ஆடியோவை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

டிசம்பர் 20க்கு அனைத்து விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்……

SHARE