பாகுபலி படத்தின் பிரம்மாண்டத்தை பார்த்து திளைத்து போய்யிருக்கும் ரசிகர்கள் அதன் இரண்டாம் பாகத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கின்றனர். படமும் 2017ல் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து விட்டனர்.
இந்நிலையில் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பாலிவுட்டின் டிம்பிள் குயின் தீபிகா படுகோனே ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வந்திருந்தன.
இதுகுறித்து தயாரிப்பாளர் ஷோபு, இதெல்லாம் வெறும் வதந்தியே. இதற்கு முன் கூட சூர்யா, ரித்திக் ரோஷன், ஸ்ரேயா ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் அனைத்தும் வதந்தியே. ரசிகர்களுக்குள் இருக்கும் அனைத்து பிரம்மாண்ட எதிர்ப்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்யும் வகையில் தயாராகி வருகிறது என்று கூறியுள்ளார்.