பாகுபலி ராணாவுடன் கைகோர்த்த சிவகார்த்திகேயனின் ஜோடி

226

உலக அளவில் பாகுபலி வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த நிலையில் இன்னும் பிரமாண்டமாக அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் ராஜமௌலி.

உச்சத்தை தொட்டிருக்கும் இந்த படத்தின் முக்கிய வேடங்களில் ஒன்றான பல்வாள் தேவா ராணா டகுபதி இந்த பார்ட் 2 விற்காக உடல் எடை பயங்கரமாக உயர்த்தி இருக்கிறார்.

அடுத்ததாக அவர் முக்கிய ஒரு கதையில் கமிட்டாகியுள்ளாராம். இது சுதந்திரத்திற்கு முன்பு நேதாஜி போஸின் இயக்கத்தை மையமாக கொண்ட ஒரு காதல் படம் என்று சொல்லப்படுகிறது.

இதில் நடிகை ரெஜினா ரொமான்ஸ் நடிகையாக ராணாவுடன் கைகோர்க்க, உடன் காஜல் அகர்வால் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்தவர் என்பது கூடுதல் தகவல்.

தெலுங்கில் உருவாகும் இப்படத்திற்கு 1945 என நம்பர்களில் பெயர் வைத்துள்ளனர். தமிழிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

06cp_sivakarthikey_2536872g

SHARE