ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் வெளியாகி வசூலில் சாதனை படைத்ததோடு மக்களின் அமோக வரவேற்பையும் பெற்றுள்ளது.
இப்படம் வெளியாகி இன்றோடு 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், படக்குழுவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராஜமௌலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 50, 100, 175 நாட்கள் என்பதெல்லாம் கடந்த காலத்தில் நடந்தது.
ஆயிரம் திரையரங்குகளில் வெளியானால் 3, 4 வாரங்கள் ஓடுவதுடன் முடிவடைந்துவிடும். சில திரையரங்குகள் மட்டும் ஷேர் செய்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி பாகுபலி படத்தின் ஓட்டம் முடிவடைந்துவிட்டது.
தவறான சாதனைகளை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம். ரசிகர்கள் எங்களுக்கு மறக்க முடியாத வெற்றியைத் தந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.