பாக்கியலட்சுமி சீரியலில் மாற்றப்பட்ட பிரபல நடிகர்- யாரு பாருங்க, போட்டோ இதோ

103

 

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். இப்போது கதையில் ஜெனி, செழியனை பிரிந்து அவரது அம்மா வீட்டில் இருக்க, அமிர்தா விவகாரம் எப்போது வெடிக்கும் என தெரியவில்லை.

இதற்கு இடையில் பாக்கிய அரசு கான்டிராக்ட் எடுக்க அதில் ஒரு புதிய பிரச்சனை சந்திக்கிறார்.

கெட்டுப்போன உணவை வழங்குகிறார்கள் என கான்டிராக்ட் கிடைக்காத ஒருவர் பாக்கியா மீது பழி போடுகிறார். ஆனால் அந்த பிரச்சனையை தைரியமாக சமாளித்து வெற்றியும் காண்கிறார் பாக்கியா.

புதிய நடிகர்
இன்றைய எபிசோடில் பழைய நடிகருக்கு பதிலாக புதிய பிரபலம் ஒருவர் நடிக்க வருகிறார். ஜெனியின் அப்பாவாக ஈரமான ரோஜாவே 2 தொடரில் நாயகர்கள் அப்பாவாக நடித்தவர் நடிக்க வந்துள்ளார்.

SHARE