பாக்கிஸ்தான் பயனிகள் விமானம் விமான விபத்தில் 47 பயணிகள் உயிரிழப்பு

281

 

பாக்கிஸ்தான் பயனிகள் விமானம் பாரிய விபத்து பலர் உயிர் இழப்பு

  • 47 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானம் விபத்தில் சிக்கியதால் பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் இருந்து 47 பயணிகளுடன் புறப்பட்ட பி.கே.661 ரக விமானம், அப்போட்டாபாத் அருகே சென்றபோது விமானத்தில் ரேடார் சிக்னல் கிடைக்காமல் மறைந்துள்ளது. இதனையடுத்து அங்குள்ள பிப்லியன் பகுதியில் உள்ள ஹவேலியன் கிராமத்தில், விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விமானத்தில் பயணம் செய்த 47 பயணிகளும் உயிரிழந்துள்ளதாக, பாகிஸ்தான் அரசு தற்போது அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து, விபத்துக்குள்ளான விமானத்தையும், உயிரிழந்த பயணிகளின் உடல்களையும் மீட்கும் பணியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

SHARE