பாக்டீரியாக்களில் நன்மை பயக்கக்கூடியவையும், தீமை பயக்கக்கூடியவையும் காணப்படுகின்றன.
இவற்றின் செயற்பாடுகளை விஞ்ஞானிகள் துல்லியமாக தொடர்ந்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இதுவரை கண்டறியப்படாததும், சற்றும் எதிர்பாராததுமான வினோத இயல்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Vibrio cholerae எனும் குறித்த இன பாக்டீரியாக நுண்ணிழைகளைப் பயன்படுத்தி இறந்த தனது சக பாக்டீரியாக்களிலில் இருந்து DNA ஐ உறுஞ்சி எடுக்கின்றது.
இதன் நுண்ணிழைகள் மனிதர்களின் தலைமுடியிலும் பார்க்க 1,000 மடங்கு சிறியவையாகும்.
தவிர இவை பச்சை நிறுத்தில் ஒளியை வெளிவிடக்கூடியதாக இருக்கின்றமையும் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.