பாக்.,கிற்கு எதிரான டெஸ்ட் – நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த இரு இங்கிலாந்து வீரர்கள் மீது நடவடிக்கை!

237

பத்திரிகையாளரின் விமர்சனத்தை கண்டித்தது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான ஸ்டுவர்ட் ஃப்ராட் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டுவர்ட் ஃப்ராட் மற்றும் ஹேல்ஸ் களமிறங்கினர். அந்த அணி 23 ரன்கள் எடுத்திருந்த போது ஹேல்ஸ் அடித்த பந்தை பாகிஸ்தான் அணி வீரர் யாசிர் ஷா அமர்களமாக கேட்ச் செய்தார். ஆனால் பந்து தரையில் பட்டுவிட்டதாக கூறி மைதானத்தை விட்டு ஹேல்ஸ் வெளியேற மறுத்தார். இதனால் கண்காணிப்பு கேமரா மூலம் முடிவை கண்டறிய முற்பட்ட போது அதில் காட்சிகள் தெளிவாக இல்லை.

எனவே மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து ஒருவழியாக ஹேல்ஸ் மைதானத்தை விட்டு வெளியேறினார். இதுகுறித்து முன்னாள் வீரர்கள் மற்றும் டெய்லி மிரர் பத்திரிகையின் விளையாட்டு பிரிவு ஆசிரியர் உள்ளிட்டோர் ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர். ஹேல்ஸ் அவுட் நியாயமானது தான் என டெய்லி மிரர் விளையாட்டு பிரிவு ஆசிரியர் கருத்து பதிவு செய்தார். ஆனால் இதற்கு பதிலளித்த ஃபிராட் டெய்லி மிரர் கொஞ்சம் நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் என்றார். இதனால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து நடுவர்களின் தீர்ப்பை ஏற்க மறுத்த ஹேல்ஸ் மீதும், தீர்ப்பை எதிர்த்த பிராட் மீதும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

SHARE