! இன்று காலை பாசிக்குடா மீனவர்கள் ‘LAND RIGHTS NOW’ எனும் வாசகத்துடன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த முன்னெடுப்பு நடவடிக்கை தொடர்பாக தெரியவருவதாவது : இன்றய தினம் உலகெங்கும் ‘LAND RIGHTS NOW’ எனும் தொனிப்பொருளில் அபகரிக்கப் பட்ட காணிகள் சம்பந்தமான முன்னெடுப்பினை நாடளாவரீதியில் ‘ஒக்ஸ் பார்ம்’ நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த காலங்களில் .பிரதமர் ரணில் விக்கிரம சிங்க பாசிக்குடா மீனவர்கள் தற்போது தொழில் நடவடிக்கையில் ஈடுபடுகின்ற காணி சுற்றுலா துறைக்காக விடுவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் . . சுற்றுலாத்துறை மக்களை சேரவில்லை என்றால் அது சுற்றுலாத்துறையாக இருக்கமுடியாது. சுற்றுலாத்துறையானது மக்களை வெளியேற்றுவது அல்லவென உலக சுற்றுலா அமைப்பின் பொதுச்செயலாளர் தாலிப் ரிபாய் தெரிவித்த கருத்தின் பிரகாரம் பாசிக்குடா மீனவர்களும் தங்களது காணி சம்பந்தமான எதிர்ப்பினை தேசிய மீனவ ஒத்துழைப்பின் ஒத்துழைப்புடன் இன்று பாசிக்குடாவில் முன்னெடுத்துள்ளனர் . இன்று உலகெங்கும் நடக்கும் இந்த முன்னெடுப்பு இலங்கையில் குறிப்பாக தற்போது சுற்றுலா துறைக்கு பிரசித்தி பெற்றுள்ள பாசிக்குடாவில் இடம்பெற்றமை மீனவர்களுக்கு இங்கு பாரிய பாதிப்பு இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டுகின்றது