பாடசலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் அட்டன் கல்வி வலயம் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை

233

நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலத்தினால் 2016 ம் ஆண்டுக்கான வாக்காளர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாடசலை மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட சித்திர போட்டியில் அட்டன் கல்வி வலயம் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் முதலாம், இரண்டாம், நான்காம், ஐந்தாம் இடத்தினை தனதாக்கிக்கொண்டனர்.

தமிழ் சிங்கள பிரிவுகள் அடங்களாக 1800 சித்திர ஆக்கங்களில் சிரேஸ்ட பிரிவுக்கான போட்டியில் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலய உயர்தர நுன்கலை மாணவர்களான யோகநாதன் ரம்யகலா முதலாம் இடத்தையும், லோகநாதன் யர்ஷாந்தினி இடண்டாம் இடத்தையும், சின்னையா வினோதன் நான்காம்  இடத்தையும், கோவிந்தசாமி மேனகா ஐந்தாம் இடத்தை பெற்றுள்ளார் வெற்றி பெற்ற மாணர்வகளுக்கு 12.07.2016  நுவரெலியா பரிசுத்த திருத்துவ மத்திய கல்லூரியில் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற. நிகழ்வில் சான்றிதழ்களும் பணப்பரிசில்களும் வழங்கப்பட்டது.  வெற்றிபெற்ற மாணவர்களுடன் வித்தியாலய பிரதி அதிபர் ஈ.திருச்செல்வம்  ஆசிரியர் ஏ.சந்திரமோகன் அகியோரை படத்தில் காணலாம்.

நோட்டன் பிரீட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

24bc9eb8-948d-47a0-88ce-864a594637e5

SHARE