பாடசாலைகளை அண்மித்ததாக மேற்கொள்ளப்படும் பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். – ஜனாதிபதி

268

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாடசாலைகளுக்கு அண்மையில் மேற்கொள்ளப்படும்

பல்வேறு விஷ போதைப்பொருள் விற்பனையினை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்பிற்கான தேசிய

வேலைத்திட்டத்தின் கீழ் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மாணவர்களையும் நாட்டையும் பற்றிச் சிந்திக்காது பணம் உழைக்கும் நபர்களினால்

மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதற்கு

கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

காலி கத்தலுவ மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் இன்று (27) முற்பகல்

கலந்துகொண்டபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிக ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

இதன்போது கல்லூரியின் புதிய தொழில்நுட்ப பீடம் ஜனாதிபதி அவர்களினால் திறந்து

வைக்கப்பட்டது.

அவ்வாறே புதிய விளையாட்டுத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்ட

ஜனாதிபதி அவர்கள், நினைவுப் பேழையினை திரைநீக்கம் செய்து வைத்தார்.

இதன் பின்னர் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின்போது கல்லூரியில் திறமை காட்டிய

மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டியில்

இரண்டாம் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற நடனப் போட்டியில் மாகாண ரீதியில்

முதலாம் இடத்தையும் பெற்றுக்கொள்வதற்கு கத்தலுவ மத்திய மகா வித்தியாலய மாணவர்கள்

திறமைப் பெற்றதுடன், அவர்களுக்கான கிண்ணங்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி அவர்களின் வருகையை முன்னிட்டு கல்லூரியின் அதிபர் சமரசிறி வேவெல்வல

அவர்களினால் ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் சந்திம வீரக்கொடி, சந்திரலால் அபே

குணவர்தன, விஜயபால ஹெட்டிஆரச்சி ஆகியோர் உள்ளிட்ட அழைக்கப்பட்ட அதிதிகள், கல்லூரி

அதிபர், ஆசிரியர் குழாம், பெற்றோர்கள். பழைய மாணவர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

 

SHARE