நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசலையொன்றுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட ரொய்ட்டர்ஸ் நிறுவன ஊடகவியலாளர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சித்திக் அஹமட் டெனிஸ் என்ற புகைப்படப் பிடிப்பாளரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளவர் ஆவார்.
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட அவரை நீர்கொழும்பு, நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.