பாடசாலை உடைக்கப்பட்டு கொள்ளை: பொலிஸ் விசாரணை தீவிரம்

164

 

மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த திருட்டுச்சம்பவத்தில் சிசிரீவி கமெரா, 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கணினி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை உடைக்கப்பட்டு குறித்த பொருட்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்டதை அவதானித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை
இதற்கமைய இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE