பாடசாலை செல்லும் 15 வயது சிறுமிக்கு இப்படி ஒரு கொடூரமா??

133

தங்கொட்டுவ காவல் துறை பிரிவிற்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த ஜுலை மாதம் பாடசாலை செல்லும் 15 வயதுடைய சிறுமியை பெற்றோரிடமிருந்து ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த சிறுமியை அப்பகுதியிலுள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று 19 வயதுடைய இளைஞர் இந்த செயலை புரிந்துள்ளார்.

பாடசாலை சிறுமியை விடுதிக்குள் அனுமதித்த குற்றத்திற்காக விடுதி உரிமையாளருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE