பாடசாலை மாணவியின் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு கண்டனம் தெரிவித்து பெற்றோர் ஆர்ப்பாட்டம்

292

மட்டக்களப்பு கறுவேப்பங்கேணி விபுலானந்தா கல்லூரியில் கற்பிக்கும் ஆசிரியரினால் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெற்றோர் பாடசாலையின் வாயிலை மூடி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர்.

வல்லுறவுக்குட்படுத்திய ஆசிரியரை சட்டத்தின் முன் நிறுத்து, உடந்தையாக இருந்த அதிபருக்கு சட்ட நடவடிக்கை உடனடியாக எடுக்கவும், வேலியே பயிரை மேயும் கதையாக ஆசிரியரின் கதை உள்ளது, பாடசாலையில் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லையா என்ற கோஷங்களை பெற்றோர் எழுப்பினர்.

மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே. பாஸ்கரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி. சுகுமாரன் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹெட்டியாராச்சி உள்ளிட்ட பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து சம்பவத்தை விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

பாடசாலையின் அதிபர் பொலிசாரினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதுடன் பொலிசார்  சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுமாறு ஆர்ப்பாட்டக் காரர்களை வேண்டினர்.

இதன்போது சம்பவத்தை கண்டித்தும் சட்ட நடவடிக்கையை விரைவுபடுத்துமாறும் பெற்றோர்கள் கையொப்பமிட்ட மகஜரை கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி. சுகுமாரனிடம் கையளித்தனர்.(படங்களும் தகவலும்:- க.சுபஜன்)

0dd91938-2a3f-4682-b3e0-472287404840 7414c63f-b0b0-4641-9cc3-7edd8e3c659a b9b6af3e-a249-4858-ba9f-98530b9454e2 c9a2b648-4545-44ed-85fc-279a1798e346 ed162b5c-4c81-464e-aa2a-71626983549a

SHARE