பாதங்களை புத்துணர்வோடு வைத்திருப்பது எப்படி

278

பொதுவாக பெண்கள் முகத்திற்கு கொடுக்கும் பராமரிப்பு கூட பாதங்களுக்கு கொடுப்பதில்லை.

இதனால் பாதங்கள் வறண்டு ,கருமையுடன் அசிங்கமாக காணப்படுவதுண்டு.

இதற்காக அடிக்கடி பியூட்டி பாலர்களுக்கு சென்று கால்களுக்கு பெடிக்யூர் செய்வது வழக்கம். இதனால் நேரமும் பணமும் செலவழிவது தான் மிச்சம்.

இதற்கு வீட்டில் இருந்தபடியே மாதம் இருமுறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.

இவை பாத நகங்களின் இடுக்குகளில் இருக்கும் அழுக்குகளை அகற்றி புத்துணர்வோடு வைத்திருக்கும்.

தற்போது வீட்டில் இருந்தப்படியே பாதங்களை எப்படி வைத்திருக்கலாம் என பார்ப்போம்.

தேவையானவை
  • சோப் நிறைந்த நீர் – கால்கள் நனையும் அளவிற்கு
  • மார்பிள் கற்கள்- கை நிறைய
  • ரோஜா இதழ்கள் – கை நிறைய
  • பால் – அரை லிட்டர்
  • வேப்பிலை – கை நிறைய
  • கோதுமை முளை எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • சந்தன எண்ணெய் – 5 துளிகள்
செய்முறை

முதலில் ஒரு டப்பில் வெதுவெதுப்பாய் சூடான நீர் எடுத்து அதில் மேலே சொன்னவற்றை கலக்குங்கள்.

பின்னர் அதில் பாதங்களை 20 நிமிடங்கள் அமிழ்த்துங்கள்.

அதன்பின் ப்யூமிக் கல்லை கொண்டு பாதங்களை சுத்தப்படுத்துங்கள். உங்கள் கால்கள் மிருதுவாய் பட்டுப் போல மாறும்.

SHARE