பாதயாத்திரையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மொழி!

248

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர் பாதயாத்திரை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த பாதயாத்திரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாதயாத்திரையின் முன்னால் எடுத்துச் செல்லப்படும் பதாகையில் தமிழ் மொழி கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பதாகையில் “பாதயாத்திரை” என்பது பிழையாக எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வல்கள், தமிழ் மொழி குறித்து பொருட்படுத்தாமையே இதற்கான காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பங்கெடுத்துள்ள இந்த பாதயாத்திரையில் தமிழ் மொழியில் பிழையாக எழுதப்பட்டுள்ளமை சாதாரண ஒரு விடயம் அல்ல என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

SHARE