சிங்கள நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கு எதிராக நாட்டில் எழுந்துள்ள எதிர்ப்பை கட்டுப்படுத்த பாதாள உலகக் குழுச் செயற்பாடுகளை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்கின்றது.
பாதாள உலகக் குழு செயற்பாடுகளின் மூலம் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்த அரசாங்கம் முயற்சிக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக மக்கள் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவதனை தடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.
நாட்டில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலைமை காணப்படுகின்றது,
விளையாட்டு போன்று மக்கள் கொலை செய்யப்படுகின்றனர்.
பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக பாரியளவு அச்சம் ஏற்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினை பலவீனப்படுத்தியுள்ளமை தேசியப் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக அமையக்கூடும்.
இந்த நிலைமையை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.