சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சகல வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்ட கர்தினால் இது பற்றி அறிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தம் கூறுகையில், மழை வெள்ளம் மற்றும் மண்சரிவினால் ஏற்பட்டுள்ள பேரனர்த்தம் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சீரற்ற காலநிலையினால் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டு இதனால் லட்சக் கணக்கானவர்கள் இருப்பிடங்களை இழக்க நேரிட்டுள்ளது.
உயிரிழப்புக்கள், காணாமல் போதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
லட்சக் கணக்கானவர்களுக்கு உரிய உணவோ, உடு துணிகளோ அடிப்படை வசதிகளோ கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
பாதிப்பிற்கு உள்ளான அப்பாவி மக்களுக்கு அனைத்து வழிகளிலும் உதவிகள் வழங்கப்பட வேண்டும், அவர்களுக்காக இறைவனை மன்றாடி பிரார்த்தனை செய்ய வேண்டும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.